வாட்ஸ் அப்பில் கடைசி ஸ்டேட்டஸ்: அரசுப்பள்ளி ஆசிரியை தூக்கில் தொங்கி தற்கொலை
Send us your feedback to audioarticles@vaarta.com
தான் யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை என வாட்ஸ்அப்பில் கடைசியாக ஒரு ஸ்டேட்டஸை பதிவு செய்துவிட்டு அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருந்து வந்தார். இவருடைய கணவர் காண்டீபன் என்பவர் தீயணைப்புதுறையில் வேலை பார்த்து வருகிறார். அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து கொண்டே நடனப் பள்ளியை ஒன்றையும் புவனேஸ்வரி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென புவனேஸ்வரி தனது வாட்ஸ் அப்பில் இனிமேல் தான் யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை என்று ஸ்டேட்டஸ் பதிவு செய்துவிட்டு உடனே செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இந்த ஸ்டேட்டஸை பார்த்த அவரது தோழிகளில் ஒருவர் உடனடியாக அவரது கணவருக்கு தகவல் கொடுக்க அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல் காவல்துறையினர் புவனேஸ்வரி செல்போன் இருக்கும் செல்போன் டவரை கண்டுபிடித்து அந்த பகுதியில் சென்று தேடினார்கள். அதன்பின் ஒரு மரத்தில் புவனேஸ்வரி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் திடீரென வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவு செய்து விட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout