மாணவிகளின் குளியல் வீடியோவை எடுக்க உதவிய சக மாணவி: பெங்களூரில் தஞ்சை இளைஞர் கைது

  • IndiaGlitz, [Friday,September 07 2018]

பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் ஹாஸ்டலில் உடன்படிக்கும் மாணவிகளின் குளியல் வீடியோவை ஒரு மாணவியின் உதவியுடன் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த தஞ்சையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர், பரப்பன அக்ரஹாரா காவல் நிலைய எல்லை பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியில் கல்லூரியில் தஞ்சையை சேர்ந்த சித்தார்த் என்ற மாணவர் படித்து வந்தார். இவர் தனக்கு நெருக்கமான மாணவி ஒருவரின் உதவியுடன் ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவிகளின் குளியல் வீடியோ, உடை மாற்றும் காட்சிகள் அடங்கிய வீடியோவை எடுத்து அதனை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மாணவியை பார்க்க வந்த அவரது தாயாரின் குளியல் வீடியோவையும் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த பெங்களூர், பரப்பன அக்ரஹாரா காவல் நிலைய அதிகாரிகள் ஐபி முகவரியை வைத்து மாணவர் சித்தார்த்தை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு அதே ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவி ஒருவரே குளியல் வீடியோவை எடுக்க உதவி செய்தது தெரிய வந்தது. உதவி செய்த மாணவியை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை எனினும் அவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சக மாணவி என்றும் பாராமல் குளியல் வீடியோவை ஒரு மாணவியே எடுக்க உதவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது