கமல்ஹாசனுக்கு டி.என்.சேஷன் கொடுத்த மதிப்பு மிகுந்த டைட்டில்

  • IndiaGlitz, [Thursday,February 22 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று 'மக்கள் நீதி மய்யம்' என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து தனது கட்சியின் கொள்கையையும் அறிவித்தார். மேலும் ஆறு தென்னிந்திய மாநிலங்களை இணைக்கும் வகையில் ஆறு கைகள் இணைந்த தனது கட்சியின் கொடியையும் நேற்று ஏற்றி வைத்தார்

இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசியல் பயண தொடக்கத்திற்கு பல்வேறு தமிழக, தேசிய கட்சி தலைவர்கள் மற்றும் விஐபிக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முன்னாள் தேர்தல் கமிஷன் டி.என்.சேஷன் அவர்கள் கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவருக்கு 'அறம் வளர்த்த நாயகன்' என்ற பட்டத்தையும் அளித்துள்ளார். இனி உலக நாயகன், அறம் வளர்த்த நாயகன் என்றே அவரது ரசிகர்களால் அழைக்கப்படுவார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன், டி.என்.சேஷன் அவர்களை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்தார் என்பதும், நல்ல உடல்நிலையில் இருந்தால் கமல் கட்சியில் சேர்ந்திருப்பேன் என்று டி.என்.சேஷன் அவர்கள் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.