நவம்பரில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு! காலாண்டு அரையாண்டு தேர்வுகள் ரத்தா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் பத்தாம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தமிழகத்தில் 2020-21 கல்வியாண்டுக்காக பள்ளிகளை எப்போது திறக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை பெற்றோரிடம் கருத்துக் கேட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளை வரும் நவம்பர் மாதம் திறக்க பள்ளிக்கல்விதுறை திட்டமிட்டுள்ளதாக வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
முதல்கட்டமாக 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கு திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு காலை மற்றும் பிற்பகலில் சுழற்சி முறையில் இரண்டு வகுப்புகளை நடத்தவும் பள்ளி கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது
இந்த நிலையில் நவம்பர் மாதமே பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் மார்ச் மாதத்திற்குப் பின்னர் நேரடியாக முழு ஆண்டு பொதுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout