தமிழகத்தில் 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்றிரவு முதல் விடாமல் கனமழை பெய்துவருகிறது. இதனால் நகரில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதால் ஆங்காங்கே மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவின் அடிப்படையில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை
திண்டுக்கல், கொடைக்கானல் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
திருப்பத்தூர், சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, கரூர், மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மழை எச்சரிக்கை- சென்னை பெருநகரில் கனமழை பெய்துவருவதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர், இராணிப்பேட்டை, சேலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஆகிய 14 மாவட்டங்களுக்கு அதிகனமழை குறித்த ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றம் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout