தமிழகத்தில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வரும் நிலையில் இதுவரை தமிழகத்தில் 42 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்களில் 2 பேர் இன்று முழு குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஈரோட்டில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் தாய்லாந்து நாட்டின் நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் இந்த எட்டு பேர்கள் என்றும், தமிழக அரசு தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சியால் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்களது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் எட்டு பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
#CoronaUpdate: #TN reports 8 new positive cases from Erode (contact of the Thai Nationals who are undergoing treatment at IRT Perundurai).The Pts were identified thru #TNHEALTH’s contact tracing. All patients are isolated for treatment. @MoHFW_INDIA @CMOTamilNadu #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 29, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments