சீனாவில் இருந்து வந்த புரோட்டா மாஸ்டருக்கு கொரானோ?
- IndiaGlitz, [Tuesday,February 04 2020]
சினாவில் கொரானோவைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு 400க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சீனாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பலர் நாடு திரும்பி வருகின்றனர்
இந்த நிலையில் சீனாவிலிருந்து தமிழகத்தை சேர்ந்த நீடாமங்கலம் வந்த புரோட்டா மாஸ்டர் ஒருவருக்கு கொரானோவைரஸ் அறிகுறியா? என்ற பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 31ஆம் தேதி சீனாவில் உணவகம் ஒன்றில் பணி பணிபுரிந்த புரோட்டா மாஸ்டர் ஒருவர் தமிழகம் திரும்பி வந்து உள்ளார். அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதால் உடனடியாக அவர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்றார்
அவர் சீனாவில் இருந்து வந்தவர் என தெரியவந்ததால் உடனடியாக அவர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறப்பு வார்டில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இதுகுறித்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கூறியபோது ’சீனாவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய அவருக்கு பிரத்யேக வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவருடைய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ரத்தப் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனையின் முடிவு வந்த பின்னரே அவருக்கு கொரானோ வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளதா? என்பது தெரியவரும் என்றும் அதுவரை அவர் கூடுதல் கண்காணிப்பில் இருப்பார்’ என்றும் கூறினார்