வெள்ள நிவாரண பணி: கேரளாவில் இருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நமது அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குவதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் சிக்கி அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டதால் அதில் இருந்து வெளியேறும் உபரி நீரால் கேரள மாநிலமே தத்தளித்து வருகிறது
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும், எதிர்க்கட்சி தலைவரும் ஒரே ஹெலிகாப்டரில் இடுக்கி மாவட்டம் சென்று வெள்ள மீட்பு பணிகுறித்து அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து வருகின்றனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைவரின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து வெள்ளத்தில் உள்ள மக்களை மீட்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அங்குள்ள அரசியல்வாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.
சென்னையில் வெள்ளம் வந்தபோது நமது அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருந்தனர். மேலும் நிவாரணங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதைவிட அதில் ஒட்டப்படும் ஸ்டிக்கருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஒரு பேரிடர் வரும்போது அரசியல்வாதிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை கேரள அரசியல்வாதிகளிடம் இருந்து நாம் பாடக்கற்று கொள்ள வேண்டியது அவசியம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
Chief Minister Pinarayi Vijayan’s visit to the flood affected areas of Idukki, Alappuzha, Ernakulam, Wayanad, Kozhikode and Malappuram has started. Revenue Minister E. Chandrasekharan, Leader of Opposition Ramesh Chennithala, are accompanying him. pic.twitter.com/Zh1M0rK3si
— CMO Kerala (@CMOKerala) August 11, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout