கோடிகளில் புரண்ட மதன் சேனல்களின், காத்து வாங்கும் நிலை....! மாஸ் காட்டிய காவல்துறை....!
- IndiaGlitz, [Tuesday,June 22 2021]
பப்ஜி மதனின் யுடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதையடுத்து, சென்னை காவல் துறையினர் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர்.
ஆபாச வார்த்தைகளால் பேசியது, பெண்களை இரவு நேர சேட்டு- க்கு அழைத்தது, தன்னுடன் விளையாடுபவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டுவது உள்ளிட்ட செயல்பாடுகள் காரணமாக, பப்ஜி மதன் மீது ஏராளாமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் மதன் குமார் மாணிக்கம் என்ற யுடியூபர் மீது, சென்னை காவல் துறையினர் வழக்குப்பதிவு அவரை தேடிய நிலையில், மதன் தலைமறைவானான். இதையடுத்து இவரின் மனைவி கிருத்திகாவை கைது செய்த காவல்துறையினர், இவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதன்பின் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய சைபர் கிரைம் காவல்துறையினர், தருமபுரியில் தனியார் விடுதியில் வைத்து மதனை கைது செய்தனர். அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்ட மதனை, சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் . இதையடுத்து நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், ஜூலை -3 ஆம் தேதி வரை பூந்தமல்லி சிறையில் அடைக்க மதன் அழைத்து செல்லப்பட்டான்.
கடந்த சில தினங்களுக்கு முன்பே சைபர் கிரைம் அதிகாரிகள், மதனின் யுடியூப் சேனல்களை முடக்க, யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இதையடுத்து மதனின் 5 யூடியூப் சேனல்களில் உள்ள வீடியோக்களை முடக்கியது சைபர் க்ரைம். அதிலும் குறிப்பாக Toxic Madhan 18+ யூடியூப் பக்கத்தில், பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள், நன்றாக படியுங்கள் என காவல்துறையினர் சிறார்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.