கம்பியூட்டர்களை தாக்கும் மால்வேர்...! அதிலிருந்து பாதுகாப்பது எப்படி...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக சைபர் கிரைம் போலீசார் கணினிகளை தாக்கும் மால்வேர்கள் குறித்து முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
லோரென்ஸ் ரான்சம்வேர் என்ற புதிய மால்வேர் தான், கம்பியூட்டர்களில் உள்ள தரவுகள் மற்றும் கோப்புகளை முடக்கும் ஒரு வடிவமாகும். இந்த வைரஸ் ஆனது, கம்யூட்டர்களை எளிதாக தாக்குகிறது. நம் தரவுகளை நாம் மீட்டெடுக்க வேண்டுமெனில் பணம் செலுத்தி திரும்ப பெறுமாறு இது கட்டமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே இந்த வைரஸ் தாக்குதலில், வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன. இதற்கு காரணம் அவர்கள் தங்களுக்கு தேவையான தரவை மீட்டெடுக்க, கேட்கப்படும் தொகையை செலுத்துவிடுவார்கள். இருப்பினும் இந்த மால்வேர் தாக்குதலில் தனிப்பட்டவர்களின் கணினிகள் மற்றும் பொதுவானவர்களின் கணினிகளும் உள்ளடங்கும்.
இதை எப்படி தவிர்க்கலாம்...?
1. தீங்கு தரும் வலைத்தளங்களை பார்வையிடுதலை தவிர்த்திடுங்கள்
2. தேவையற்ற இணைப்பிலிருந்து பதிவிறக்குவதை தவிர்க்கலாம்.
3. தேவையற்ற விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் இந்த மால்வேர்-ஆல் பாதிப்பு ஏற்படக்கூடும்
ரான்சம்வேர் போன்ற புதிய மால்வேர்களை பயன்படுத்தி, உலகளாவிய நிறுவனங்களின் கணினிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் லட்சக்கணக்கில் டாலர்களை கேட்கின்றனர் சைபர் குற்றவாளிகள்.
துவக்கத்தில் லோரென்ஸ் ரான்சம்வேர் என்பது ஃபிஷிங் மின்னஞ்சல்கள், ஸ்பேம் மற்றும் பிற நுட்பங்கள் மூலம் பரப்பப்படுகிறது.
இந்த மால்வேர் ஒரு கணினியில் உள்ள முக்கிய தரவுகளை, வலைப்பின்னல்கள் மூலம் இணைக்கப்பட்ட பிற கணினிகளுக்கும் பரப்பி வருகின்றது.
இந்த மால்வேர் தரவுகளை முடக்குவதுடன், முக்கிய கோப்புகளை மீட்க பாதிக்கப்பட்டவரிடத்தில் பணத்தை கேட்கிறது. அதை செலுத்தவும் பிரத்யேகமாக TOR கட்டண தளத்தை அமைத்துள்ளது.
முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியவை:
ஃபிஷிங் மின்னஞ்சல்கள், இணையதளங்களில் தீங்கிழைக்கும் விளம்பரங்கள், மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மற்றும் திட்டங்கள் வழியாகத்தான் ரான்சம்வேர் மால்வேர் பாதிப்பு நடக்கிறது. அதனால் நம்பகத்தன்மை இல்லாத வலைப்பக்கங்கள் மற்றும் இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது.
கம்பியூட்டர்களில் கணினி மென்பொருள் (Operating System) மற்றும் பயன்பாடுகள் (APPS) உள்ளிட்டவற்றை அப்டேட் செய்தும், புதுப்பித்தும் வைத்திருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வமற்ற சேனல்களில் மூலம் கிடைக்கும் இணைப்புகளை தவிர்க்க வேண்டும்.
நம்பகத்தன்மை உள்ள உள்ளடக்கங்களை மட்டும் பதிவிறக்கம் செய்யுங்கள்.
இணையத்திலிருந்து தெரியப்படாத கணக்குகளை நீக்கி விடுங்கள்.
மால்வேர்கள் மூலம் கோப்புகள் அழிக்கப்படுவதால், தரவுகளை பிரதி செய்துவைத்துக் கொள்வது நல்லது. தரவுகளை வேறு வழியில் சேமித்து வைத்தலும் நன்று.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments