டோக்கன் விநியோகம், பறக்கும் படை ஆய்வு, 6 அடி இடைவெளி: டாஸ்மாக் திறக்க காவல்துறையின் உத்தரவுகள்

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளதை அடுத்து தமிழக காவல்துறை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது: அவற்றில் சில முக்கியமானவற்றை பார்ப்போம்:

* ஒவ்வொருவருக்கும் டோக்கன் விநியோகம் செய்து மதுபாட்டில் வழங்க வேண்டும்

* 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பறக்கும் படையினர் ஆய்வு செய்ய வேண்டும்

* கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும்

* கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு
வரிசைப்படுத்த வேண்டும்

* அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க உத்தரவு

* ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவு

* ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்

* நாளை ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்

மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று காவல்துறை தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 

More News

'உன் ஆத்மா சாந்தி அடையட்டும்': விராத் கோஹ்லியின் இரங்கல் ஸ்டேட்டஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்கோஹ்லி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடன் 11 ஆண்டுகள் வாழ்ந்த புரூனோ என்ற செல்ல நாய் மரணம் அடைந்தது குறித்து இரங்கல் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகும் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம்

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவர் இயக்கிய தனுஷின் 'ஜகமே தந்திரம்'

வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா!

சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக வரலாற்றில்  (மே 6) இன்று...

MIR ஸ்கேனிங் கருவியைக் கண்டுபிடித்த பால் கிறிஸ்டியன் லாட்டர்பர் பிறந்த தினம் இன்று.

சூரியனில் இருந்து வெளிவரும் வைட்டமின் D கொரோனா உயிரிழப்பை குறைக்கிறது!!! புதிய ஆய்வு!!!

வைட்டமின் D குறைபாடு அதிகமுள்ள நாடுகளில் கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருப்பதாக ஒரு புதிய ஆய்வு ஒன்று வெளியிடப் பட்டுள்ளது.