அரசுக்கு 3 நாள் கெடு. ரேசன் கார்டு, ஆதார் அட்டை திருப்பி அளிக்கப்படும். இளைஞர்கள் ஆவேசம்

  • IndiaGlitz, [Tuesday,January 17 2017]

ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்று இளைஞர்கள் பட்டாளம் மெரீனாவில் நேற்று காலை முதல் குவிந்துள்ளது. கடும் குளிரிலும் பெண்கள் உள்பட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அமைச்சர்கள் முன்வந்தபோதிலும் இந்த முறை பேச்சுவார்த்தையோடு கலைந்துவிடும் கூட்டம் அல்ல, இந்த கூட்டம் என்றும், ஜல்லிக்கட்டு வழக்கிற்கான தீர்ப்பு எங்களுக்கு வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட இளம்பெண் ஒருவர் கூறியபோது, 'நாங்கள் மூன்று வருடம் பொறுத்துவிட்டோம், இனியும் பொறுமையாக இருக்க முடியாது. அரசுக்கு நாங்கள் 3 நாள் கெடு விதிக்கின்றோம். இந்த மூன்று நாட்களில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை என்றால் எங்கள் அனைவருடைய ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகிவற்றை திருப்பி கொடுப்போம் அல்லது எரிப்போம்' என்று கூறினார்.

More News

இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். சீயான் விக்ரம் வாழ்த்து

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் உணர்வு கொண்ட அனைத்து இளைஞர்களும் நேற்று காலை முதல் சென்னை மெரீனா கடற்கரையில் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு குவியும் ஆதரவு. இளைஞர்கள் எழுச்சி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைதானவர்களை விடுவிக்க கோரியும் இன்று காலை குறைந்த எண்ணிக்கையுள்ள இளைஞர்களால் தொடங்கப்பட்ட மெரினா போராட்டம் நேரம் ஆக ஆக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளால் தற்போது மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் அளவுக்கு கூட்டம் பெருகி உள்ளது...

பீட்டாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். விஜய்யின் வீடியோ செய்தி

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில்...

தமிழன் போராடுவது எதற்காக? ராகவா லாரன்ஸ் ஆவேச அறிக்கை

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

மெரினாவில் மின்சாரம் கட். செல்போன் ஒளியில் தொடரும் போராட்டம்

மக்கள் சக்தி குறிப்பாக இளைஞர்கள் சக்தி ஒன்றிணைந்து விட்டால் அதை அடக்க யாராலும் முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது...