தமிழகத்திற்கு புதிய ஆளுனர் நியமனம்
- IndiaGlitz, [Saturday,September 30 2017]
தமிழக கவர்னர் ரோசய்யா அவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி முடிந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக பொறுப்பு ஆளுனராக மகாராஷ்டிரா ஆளுனர் வித்யாசாகர் ராவ் கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார். இந்த நிலையில் இன்று தமிழகத்தின் புதிய ஆளுனராக பன்வாரிலால் ரோஹித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்ட்ராவின் விதர்பா என்ற பகுதியைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித் மகாராஷ்ட்ராவின் நாக்பூர் தொகுதியில் இருந்து 3 முறை எம்.பி. யாக தேர்வு செய்யப்பட்டவர். பார்வார்ட் பிளாக், காங்கிரஸ், தனிக்கட்சி என அரசியல் பாதையை கடந்து வந்த பன்வாரிலால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார்.
2016 ஆம் ஆண்டில் அசாமிலும், தற்போது மேகாலயாவிலும் ஆளுநராக பணியாற்றிய பன்வாரிலால் புரோஹித் இனி தமிழக ஆளுனராக மட்டும் பணியாற்றவுள்ளார். தமிழகத்தின் புதிய ஆளுனர் பன்வாரிலால் அவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.