ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் எடுப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யும் வழக்கம் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வரும் நிலையில் இதிலுள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால் சேவை கட்டணமாக ஒவ்வொரு டிக்கெட் எடுக்கும் ரூபாய் 30 பெறுவதுதான். பத்து டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவைக்கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டிய் நிலை இருந்தது.
இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என ரசிகர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கமும் இதுகுறித்து கோரிக்கைகளை எழுப்பியிருந்த நிலையில் ஆன்லைன் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யும் நிறுவனங்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்தன.
இந்த நிலையில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான இணையதள சேவை கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எத்தனை டிக்கெட் முன் பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவை கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு டிக்கெட்டும் முன்பதிவு செய்யப்படும்போது ரூபாய் 30 வசூல் செய்து வந்த நிலையில் இனிமேல் ஒரே நேரத்தில் எத்தனை டிக்கெட் முன் பதிவு செய்தாலும் ரூபாய் 30 மட்டுமே முன்பதிவு கட்டணம் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு ஆன்லைனில் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments