விஷால் கோரிக்கை நிராகரிப்பு: தீபாவளி படங்களின் நிலை என்ன?
- IndiaGlitz, [Monday,October 09 2017]
நேற்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் 64ஆம் ஆண்டின் பொதுக்குழு கூட்டத்தில் விஷால் பேசியபோது, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் தமிழக அரசின் கேளிக்கை வரி 10% வரியையும் சேர்த்து மொத்தம் 40% வரியை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் சினிமா தொழிலே நசிவடையும் நிலை ஏற்படும். கேளிக்கை வரியை முற்றிலும் நீக்கினால்தான் சினிமா தொழில் இயல்பான நிலைக்கு திரும்பும். இதுகுறித்து நாளை தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து எங்கள் நிலையை தெரியப்படுத்துவோம் என்று கூறினார்
விஷாலின் இந்த கோரிக்கைக்கு இன்று பதிலளித்துள்ள செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது: கேளிக்கை வரியை குறைக்கவோ, ரத்து செய்யவோ தற்போது எந்த திட்டமும் அரசிடம் இல்லை. 10% கேளிக்கை வரி விதிக்கப்பட்டாலும் டிக்கெட் விலை உயர்ந்துள்ளதால் திரைத்துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கேளிக்கை வரியை முற்றிலும் நீக்கும் வரை -புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்ற தயாரிப்பாளர் சங்க முடிவால் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் 'மெர்சல்' உள்பட பல திரைப்படங்களின் நிலை என்ன? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.