'பில்லா பாண்டி' படத்திற்கு பாராட்டு தெரிவித்த தமிழக அமைச்சர்கள்

  • IndiaGlitz, [Saturday,November 10 2018]

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து தமிழக அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 'சர்கார்' படத்துடன் வெளிவந்த ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி' திரைப்படத்திற்கு தமிழக அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழக அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் ஆகியோர் நேற்று 'பில்லா பாண்டி' படம் பார்த்தனர் இந்த படத்தை பார்த்தபின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியபோது, 'இந்த படத்தை நாங்கள் ரசித்து பார்த்தோம். நல்ல கருத்து உள்ளது. இப்படிப்பட்ட படத்தை மக்கள் வரவேற்பார்கள் என்று கூறினார்.

விஜய்யின் 'சர்கார்' படத்தை கடுமையாக விமர்சனம் செய்து புரமோஷன் செய்து வரும் தமிழக அமைச்சர்கள், 'பில்லா பாண்டி' படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.