'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு தமிழக அமைச்சர் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Tuesday,October 22 2019]

வரும் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடித்த ‘கைதி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாகும் முதல் நாளில் அதிகாலை காட்சிக்காக பல திரையரங்குகள் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை உள்பட ஒருசில நகரங்களில் பிகில், கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களும் அதிகாலை 4 மணி முதல் காட்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளியையொட்டி வரும் 25ம் தேதி வெளியாகும் பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்றும் விதியை மீறி திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனையில்லை என உறுதியளித்தால் சிறப்பு காட்சியை அனுமதிக்க பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் ‘பிகில்’ மற்றும் ‘கைதி’ அதிகாலை காட்சிக்காக டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.