ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலையா? தமிழக அமைச்சர் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் நிலையில் தற்போதைக்கு அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேர்கள் விடுதலை குறித்த வழக்கு டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருவதால் அந்த வழக்கு முடிவடையும் வரை அவர்களை விடுவிக்க முடியாது என் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய மாநில அரசு முடிவு செய்தது. ஆனால் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு தான் இன்னும் முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout