டெபாசிட்டை இழப்பார் நடிகர் விஷால்: தமிழக அமைச்சர் பேட்டி

  • IndiaGlitz, [Saturday,December 02 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் அரசியலுக்கு வரவுள்ளதாக அறிவிப்பு மட்டுமே செய்து கொண்டிருக்கும் நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிரடியாக ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் தனது அரசியல் அறிவிப்பை அதிகாரபூர்வமாக விஷால் அறிவித்துள்ளார்.

விஷாலின் இந்த அதிரடி முடிவுக்கு பெரும்பாலான திரையுலகினர் வாழ்த்துக்களும் ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும் விஷாலின் இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகளிடையே கூட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷாலின் இந்த் அதிரடி முடிவு குறித்து கருத்து கூறிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'நடிகர் விஷால் ஒன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா போல அல்ல என்றும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் விஷால் டெபாசிட்டை இழப்பார் என்றும், அரசியல் மட்டுமல்ல, விஷாலின் திரைப்பட வாழ்க்கையும் அஸ்தமிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.