தமிழகத்தில் முதல்முறையாக அமைச்சருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Friday,June 19 2020]
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் 2000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே திமுக எம்எல்ஏ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அமைச்சர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் இடம் பெற்றிருந்தவர் அமைச்சர் கேபி அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனது வீட்டிற்குச் சென்று தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது