தமிழகத்தில் முதல்முறையாக அமைச்சருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் 2000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே திமுக எம்எல்ஏ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அமைச்சர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் இடம் பெற்றிருந்தவர் அமைச்சர் கேபி அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனது வீட்டிற்குச் சென்று தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 

More News

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கண்டுபிடிப்பு: யார் தெரியுமா?

நேற்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசி அழைப்பு மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள

தமிழகத்தில் 2வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

தமிழகத்தில் நேற்று முதல்முறையாக கொரோனா பாதிப்பு 2000ஐ தாண்டிய நிலையில் இன்று மீண்டும் 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முகத்தை மட்டும் மறைத்து யாஷிகா கொடுத்த கவர்ச்சி போஸ்! நெட்டிசன்கள் விமர்சனம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக எந்தவித படப்பிடிப்பும் இல்லாத காரணத்தினால் திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி

சீன பொருட்களை தூக்கி போட்டு உடைக்கும் இந்தியர்கள்: யாருக்கு நஷ்டம்?

இந்தியா மற்றும் சீனா எல்லையில் சமீபத்தில் நடந்த தாக்குதலை அடுத்து இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததை அடுத்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வந்துவிட்டது... கொரோனா வைரஸை கொல்லும் அதிநவீன முகக்கவசம்!!!

உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பீதியில் இருக்கின்றனர். ஆனால் இதுவரை தடுப்பூசி, சிகிச்சை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் பட வில்லை.