'விஸ்வாசம்' படத்தின் பாடலுக்கு தமிழக அமைச்சர் பாராட்டு!
- IndiaGlitz, [Friday,August 30 2019]
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' என்ற பாடலுக்கு தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர், சிவாஜி படங்களில் அழகு தமிழில் அர்த்தமுள்ள வரிகளில் பாடல்கள் வெளிவந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் புரியாத வார்த்தைகள், கொச்சையான அர்த்தம் கற்பிக்கும் வகையில் பாடல்கள் வெளிவந்ததால் தமிழார்வர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் அஜித் நடித்த விஸ்வாசம்' படத்திற்காக 'கண்ணான கண்ணே' என்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் தாமரை அந்த பாடலை ரசிக்கும் வகையில் எழுதியது மட்டுமின்றி வழக்கில் இருந்து மறைந்து கொண்டிருந்த பல வார்த்தைகளை மீட்டெடுத்து பிரபலப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியபோது, 'அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலில் , பாடலாசிரியர் தாமரை வழக்கொழிந்த தமிழ் சொற்களை மீட்டெடுத்து பயன்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. இந்த பாடலில் பொன்னான கையால் நீவவா... என்ற பழைய சொல்லை பயன்படுத்திய பாடலாசிரியர் தாமரை, வசீகரா , கலாபக்காதலன் போன்ற பழைய தமிழ் சொற்களையும் மீட்டு எடுத்து உள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார். அமைச்சரின் இந்த பாராட்டை அடுத்து விஸ்வாசம் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.