சிம்பு மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு: பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Tuesday,January 22 2019]

நடிகர் சிம்பு இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில், 'கட் அவுட், பாலாபிஷேகம் வேண்டாம் என்று நான் கூறியதை சிலர் கிண்டல் செய்துள்ளனர். எனக்கு இருப்பதே இரண்டு அல்லது மூன்று ரசிகர்கள்தான் என்று கூறியுள்ளனர். அதனால் அந்த இரண்டு, மூன்று ரசிகர்களுக்கு என அன்பு வேண்டுகோள். எனது ரசிகர்கள் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் ரிலீஸ் ஆகும்போது எனக்கு கட் அவுட் வையுங்கள், பாக்கெட் பால் எல்லாம் வேண்டாம், அண்டா அண்டாவா பால் ஊத்துங்க, வேற லெவலில் இந்த படத்தின் ரிலீசை கொண்டாடுங்கள்'. ஏனெனில் எனது ஒருசில ரசிகர்கள் செய்யும் இந்த செயலால் யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை' என்று நக்கலாக கூறியிருந்தார்

ஆனால் சிம்புவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியபோது, 'தனது கட்அவுட்டுக்கு அண்டாவில் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறிய நடிகர் சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

More News

'இந்தியன் 2' படத்தில் இணைந்த பிரபல குணசித்திர நடிகர்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.

தனுஷின் 'அசுரன்' பட நாயகியாகும் பிரபல மலையாள நடிகை

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவுள்ள 'அசுரன்' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தனுஷ் நேற்று அறிவித்தார்.

அஜித்தின் அரசியல் அறிக்கைக்கு தமிழிசை பதிலடி

அஜித் ரசிகர்கள் சிலர் நேற்று முன் தினம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

கட் அவுட் வைங்க, அண்டா அண்டாவா பால் ஊத்துங்க! சிம்புவின் நக்கல் வீடியோ

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ ஒன்றில் வரும் பிப்ரவரியில் வெளியாகவுள்ள தனது 'வந்தா ராஜாவாதான் வருவேன்'

அஜித்தின் அரசியல் தெளிவு அறிக்கை குறித்து கனிமொழி கருத்து

அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் சேர்ந்ததாக வெளிவந்த செய்தியை அடுத்து பல்வேறு யூகங்களுடன் வதந்திகள் நேற்று வெளியானது.