கோவிட் சென்ட்ரை சுத்தமாக மாற்றிய, இளம் பத்திரிக்கையாளர் மரணம்...!
- IndiaGlitz, [Monday,May 24 2021]
சென்னையைச் சேர்ந்த இளம் செய்தியாளர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஊடக நண்பர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி இந்து உள்ளிட்ட நாளிதழ்களில் பணியாற்றி வந்தவர் தான் சென்னையைச் சேர்ந்த இளம் பத்திரிக்கையாளர் பிரதீப் குமார்(29). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதற்கு முன் குருநானக் என்ற பள்ளியில் அமைந்துள்ள கோவிட் சென்டரில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கழிவறைகளின் சுகாதாரமற்ற முறை மற்றும் உணவுகளில் உள்ள குறைபாடுகள் குறித்து கடந்த 12-ஆம் தேதி டுவிட்டரில் கூறியிருந்தார். இதையடுத்து அந்த கோவிட் சென்டர் மற்றும் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டது, அது குறித்தும் டுவிட் போட்டிருந்தார். இதன் பின் பிரதீப்-ம், அவரது தாயும் கோவிட் சென்டரில் இருந்து தங்களுடைய விருப்பத்தின் வெளியேறுவதாகவும், வீட்டில் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதீப், கடந்த 17-ஆம் தேதி ஐசியூ படுக்கை தேவை என அரசு ஹெல்ப்லைன் எண்-ஐ டேக் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த அவர் நேற்றிரவு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இவரின் இறப்பிற்கு, ஊடக நண்பர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.