நிதி ஒதுக்கி, குழுக்கள் அமைத்தாலும் மேகதாதுவில் எந்த காலத்திலும் அணைக்கட்ட முடியாது: துரைமுருகன் திட்டவட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மேகதாதுவில் எந்த காலத்திலும் கர்நாடகா அணைக்கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏகாம்பரநல்லூர், கொண்டகுப்பம், வசூர், நெல்லிகுப்பம், அக்ராவரம் ஆகிய பகுதிகளில் 1 கோடியை 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டங்கள் திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "வேலூர் பொன்னை ஆற்றில் செக் டேம் கட்ட 20 கோடி மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டி இருக்கிறேன். அதேபோல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகிறோம். குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கன மழையால் பாதிக்கப்பட்ட 701 பாலங்களை கண்டறியப்பட்டு மத்திய அரசிடம் நிதி பெற்று சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், சேர்காட்டில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. காவேரி ஆற்றில் மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக மாநில அரசு நிதியினை ஓதுக்கலாம், கமிட்டிகளை அமைக்கலாம், வேகமாக பேசி வரலாம் ஆனால் தமிழக அரசின் அனுமதில்லாமல் மேகதாது அணையில் எந்த காலத்திலும் அணை கட்ட முடியாது எனவும் அதுதான் சட்டம் அதுதான் நீதி எனவும் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதில் எங்களுக்கு கவலையில்லை" என தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com
Comments