அரசுடமையானது ஜெயலலிதாவின் 'வேதா இல்லம்': மீட்டெடுப்பேன் என ஜெ.தீபா சபதம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 'வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் முடிவு செய்தது. ஆனால் இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டை கையகப்படுத்துவதற்காக, வீட்டிற்கான இழப்பீட்டு தொகையான 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் அரசு செலுத்த வேண்டும் என, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரூ. 68 கோடியை தமிழக அரசு செலுத்தியது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள், சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்று கொள்ளலாம். நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதல்வர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை. நினைவு இல்ல முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை சட்டரீதியாக மீட்டெடுப்பேன் என்றும், அரசுடைமையாக்கியதை எதிர்த்து சட்டரீதியாக மேல்முறையீடு செய்வோம் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments