விஜய் படத்திற்கு தமிழக அரசு விளம்பரம்: பிக்பாஸ் நடிகை கமெண்ட்
- IndiaGlitz, [Tuesday,September 24 2019]
விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை சற்றுமுன் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதே கல்லூரியில் தான் ரஜினிகாந்தின் ’பேட்ட’ உட்பட பல திரைப்படங்களின் ஆடியோ விழா நடைபெற்று வந்த நிலையில் தற்போது விஜய்யின் ’பிகில்’ படத்திற்கு மட்டும் விளக்கம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விழாவில் விஜய் கூறிய ஒரு சில கருத்துக்கள் தான் இந்த நோட்டீசுக்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது
இந்த நிலையில் தமிழக அரசு விஜய் படத்திற்கு இலவச விளம்பரம் செய்ய தயாராகி விட்டது என பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரும் நடிகையுமான கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கஸ்தூரியின் இந்த கருத்தை சமூக வலைதள பயனாளிகள் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் விஜய் பேச்சுக்கு அமைச்சர்கள் பதிலடி கொடுத்ததால் இந்த படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பியது மூலம் இன்னும் அதிக விளம்பரம் கிடைத்துக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.