தக்க நேரத்தில் விலையை குறைத்த முதல்வர்....! எதற்கு தெரியுமா..?
- IndiaGlitz, [Thursday,May 20 2021]
கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்களில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள், கொரோனா பரிசோதனை செய்ய கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் கீழ், தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்ய, ரூ.800-லிருந்து கட்டணம் ரூ.550-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் குழு மாதிரிக்கான கட்டணம் ரூ.600-லிருந்து, ரூ.400-ஆக குறைக்கப்பட்டுள்ளது. பயனாளியாக இல்லாதவர்களுக்கு கட்டணம் ரூ.1200-லிருந்து, ரூ.900-ஆக குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவே தனியார் ஆய்வகத்தில் இருப்பவர்கள், வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டால், அவர்கள் கூடுதலாக ரூ.300 கட்டணத்தை வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.