பிகில் சிறப்பு காட்சி குறித்த தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் வெளியாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் தியேட்டர் முன் இப்போதே குவிந்துள்ளனர். விஜய் ரசிகர்களுக்கு இன்றே தீபாவளி ஆரம்பித்துவிட்டதை போல் திரையரங்குகள் முன் பட்டாசு சத்தம் தொடர்ந்து ஒலித்து வருகின்றன.
இருப்பினும் பிகில் திரைப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு இன்னும் அனுமதி தராததால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். முதல் காட்சியே நாளை காலை 9 மணிக்கு மேல்தான் தொடங்குமோ என்ற கவலையும் அவர்களிடம் இருந்தது.
இந்த நிலையில் பிகில் சிறப்பு காட்சி விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு சற்றுமுன் அனுமதி வழங்கியுள்ளார். இந்த தகவலை பிகில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். அவர் கூறியதாவது: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்துள்ளதற்கு நன்றி’ என்று பதிவு செய்துள்ளார். இதனால் திட்டமிட்டபடி அதிகாலை காட்சி நாளை உண்டு என்பது தற்போது 100% உறுதியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் கட்டுப்படுத்த முடியாத உற்சாகத்தில் உள்ளனர்.
இதனால் தமிழக அரசு பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி அளித்துள்ளது உறுதியாகி உள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருப்பதால் நாளை அதிகாலை முதல் காட்சிகள் தொடங்கும் என்பது உறுதியாகி உள்ளது.
A big thank you to our honourable CM and the Government of TamilNadu for allowing special shows for this Diwali Weekend ???? ??
— Archana Kalpathi (@archanakalpathi) October 24, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com