ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Thursday,December 31 2020]

தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைந்ததை அடுத்து ஜனவரி 31ஆம் தேதி வரை தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் நீடிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

சமீபத்தில் தளபதி விஜய் தமிழக முதல்வரைச் சந்தித்த போது திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் திரையரங்குகளில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பதால் 50% இருக்கைகள் மட்டுமேஅனுமதிக்கப்படும் என்ற நிபந்தனை நீட்டிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிபந்தனையால் பொங்கல் தினத்தில் வெளியாகும் ‘மாஸ்டர்’ மற்றும் ‘ஈஸ்வரன்’ படங்களின் வசூல் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் புதிய வகை வைரஸ் பரவும் காரணத்தினால் பொங்கல் தினத்தில் மெரினா கடற்கரைக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், அரசியல் பொழுதுபோக்கு மதம் சார்ந்த கூட்டங்களை உள்அரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்த மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் திரைப்பட மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு முழு அளவில் தொழிலாளர்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, வழிபாட்டு தலங்களில் வழக்கமான நேர நடைமுறைகளின்படி பொது மக்களை அனுமதி அளித்துள்ளது

புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஆந்திரா கர்நாடகம் புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இபதிவு கட்டாயம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது