டாஸ்மாக்கை அடுத்து கோவில்களையும் திறக்க அரசு அதிரடி முடிவு!
- IndiaGlitz, [Thursday,May 07 2020]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் மத்திய அரசும் மாநில அரசுகளும் ஊரடங்கு உத்தரவில் சிலர் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. சமீபத்தில்தான் தனிக்கடைகளைத் திறக்கலாம் என்று அறிவித்த தமிழக அரசு இன்று முதல் டாஸ்மாக்கையும் திறந்து விட்டுள்ளது
இதனை அடுத்து சற்றுமுன் கிடைத்த தகவலின் படி தமிழகத்தில் கோவில்களையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. 33% ஊழியர்களுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களை திறக்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து கோவில்களும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அனைத்து திருக்கோயில்களிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, திருக்கோயில்களில் நோய்தடுப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் ஒரு சிலர் ஊரடங்கு உத்தரவை மீறிவிடுவதால் கோடிக்கணக்கானோர் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டில் இருந்ததற்கு அர்த்தம் இல்லாமல் போகிறது. கோயம்பேடு உள்பட பல சம்பவங்களில் ஒரு சிலர் செய்த தவறால் ஒட்டு மொத்த மாநில மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்காமல் ஓரளவு தளர்வுகளை மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தான் டாஸ்மாக் மற்றும் கோவில்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது