கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வர தடை: தமிழக அரசின் அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக விலகலை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று சென்னையில் மிக அதிகமாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள இருவருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதனையடுத்து பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் மட்டுமே மார்க்கெட்டுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
1. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் நேரடியாக வர தடைச்செய்யப்பட்டுள்ளது.
2. கோயம்பேடு வணிக வளாகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் சில்லறை விற்பனை முழுவதுமாக தடைச்செய்யப்படுகிறது.
3. சென்னை பெருநகர மாகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அந்தந்த பகுதிகளில் உள்ள திறந்தவெளி மைதானம் மற்றும் பேருந்து நிலையத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
4. கோயம்பெடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ மார்க்கெட் மற்றும் பழங்கள் அங்காடி வியாழன் முதல் மாதவரம் பேருந்து நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
5. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் மற்றும் உணவு தாணியங்கள் ஏற்றிவரும் வெளி மாநில வாகனங்கள் மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொருட்களை இறக்கி வைத்தபின் வெளியேற்றப்படும்.
6. அதிகாலை முதல் 7.30 மணி வரை வியாபாரிகள் சில்லறை விற்பனைக்கு காய்கறிகள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
7. காய்கறி அங்காடிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அட்டவணையானது கோயம்பேடு உணவுதாணிய அங்காடிக்கும் பொருந்தும்.
8. தற்பொழுது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் லாரிகள் மற்றும் வீட்டு வினியோக நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் காய்கறி வினியோகமானது தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments