கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வர தடை: தமிழக அரசின் அதிரடி முடிவு

கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக விலகலை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று சென்னையில் மிக அதிகமாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள இருவருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதனையடுத்து பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் மட்டுமே மார்க்கெட்டுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

1. கோயம்பேடு மார்க்கெட்டில்‌ காய்கறிகள்‌, பழங்கள்‌, பூக்கள்‌ உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள்‌ நேரடியாக வர தடைச்செய்யப்‌பட்டுள்ளது.

2. கோயம்பேடு வணிக வளாகத்தில்‌ தற்பொழுது நடைபெற்று வரும்‌ சில்லறை விற்பனை முழுவதுமாக தடைச்செய்யப்படுகிறது.

3. சென்னை பெருநகர மாகராட்சி மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அந்தந்த பகுதிகளில்‌ உள்ள திறந்தவெளி மைதானம்‌ மற்றும்‌ பேருந்து நிலையத்தில்‌ காய்கறிகள்‌, பழங்கள்‌ விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

4. கோயம்பெடு மார்க்கெட்டில்‌ இயங்கி வந்த பூ மார்க்கெட்‌ மற்றும்‌ பழங்கள்‌ அங்காடி வியாழன்‌ முதல்‌ மாதவரம்‌ பேருந்து நிலையத்தில்‌ மறு அறிவிப்பு வரும்‌ வரை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

5. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள்‌ மற்றும்‌ உணவு தாணியங்கள்‌ ஏற்றிவரும்‌ வெளி மாநில வாகனங்கள்‌ மற்றும்‌ வெளிமாவட்ட வாகனங்கள்‌ மாலை 6.00 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரை பொருட்களை இறக்கி வைத்தபின்‌ வெளியேற்றப்படும்‌.

6. அதிகாலை முதல்‌ 7.30 மணி வரை வியாபாரிகள்‌ சில்லறை விற்பனைக்கு காய்கறிகள்‌ வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

7. காய்கறி அங்காடிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அட்டவணையானது கோயம்பேடு உணவுதாணிய அங்காடிக்கும்‌ பொருந்தும்‌.

8. தற்பொழுது சென்னைப்‌ பெருநகர்‌ வளர்ச்சிக்‌ குழுமத்தால்‌ லாரிகள்‌ மற்றும்‌ வீட்டு வினியோக நிறுவனங்கள்‌ மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ காய்கறி வினியோகமானது தொடர்ந்து நடைபெறும்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

More News

மத்திய, மாநில அரசுகளை மீண்டும் பால்கனி அரசுகள் என விமர்சித்த கமல்ஹாசன்!

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசை பால்கனி அரசு என விமர்சனம் செய்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன

இந்த அரசு சுத்த வேஸ்ட்: மீராமிதுன் பகீர் குற்றச்சாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளரான மீராமிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடனும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஒருமுறை கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா வருமா??? WHO என்ன சொல்கிறது???

உலகில் பல நாடுகள், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளவர்கள் இயல்பான வேலைகளுக்கு திரும்பலாம் எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றன.

சார்ஜ் போட்டு வீடியோகால் பேசிய பெண்: மொபைல் வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்

சார்ஜ் போட்டு கொண்டே மொபைல் போனில் பேசக்கூடாது என்றும், இதுபோன்று பேசினால் மொபைல் வெடித்து விபரீதம் ஏற்பட்டுள்ள பல சம்பவங்கள் நடந்துள்ளது என்று தெரிந்தும்

நாங்கள்‌ எங்கள் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம்: தஞ்சை கோவில் சர்ச்சை குறித்து சூர்யாவின் அறிக்கை

கடந்த சில நாட்களாக ஜோதிகா பேசிய தஞ்சை பெரிய கோவில் குறித்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்