ஆன்லைன் ரம்மிக்கு தடை: தமிழக அரசு அதிரடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளியாட்டால் இளைஞர்கள் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதோடு ஒரு சிலர் தற்கொலை செய்து விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருவதை அடுத்து இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பலர் குரல் கொடுத்தனர்
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்ட விளையாட்டு முதலில் பொழுதுபோக்காக ஆரம்பித்து அதன் பின் அதற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாத வகையில் பல இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தனர். கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி தோல்வி அடைந்து அதன்பின் தற்கொலை செய்து கொண்ட உதாரணங்கள் தமிழகத்தில் பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டை தடைசெய்ய வேண்டுமென நீதிமன்றங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்குகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 13 பேர் ஆன்லைன் விளையாட்டால் பணம் நஷ்டம் அடைந்து தற்கொலை செய்து கொண்டனர்
இந்த நிலையில் தமிழக இளைஞர்களை காக்கும் வகையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு உள்பட இணைய வழி விளையாட்டுகளுக்கு தடை விதித்து சமீபத்தில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இந்த அவசரச் சட்டம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இந்த அவசர சட்டத்துக்கு அவர் உடனடியாக ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’ஆன்லைன் ரம்மி போன்ற இணைய வழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்களது பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த விளையாட்டு விளையாடுபவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைன் விளையாட்டில் அங்கம் வகித்தால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் மற்றும் 2 வருட சிறை தண்டனையும் உண்டு என இந்த அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments