டாஸ்மாக் கடை மூடப்பட்ட விவகாரம்: தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த இரண்டு மாதங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அனுமதித்த தளர்வின் அடிப்படையில் ஒருசில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன

அந்த வகையில் கடந்த 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் சென்னை தவிர பிற இடங்களில் திறக்கப்பட்டன என்பது தெரிந்ததே. முதல் நாளில் 150 கோடி ரூபாய்க்கும் இரண்டாவது நாளில் 126 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன,

இதனை அடுத்து திடீரென நேற்று மாலை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்பதால் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடித்து தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே தமிழகத்தில் மதுக் கடைகள் திறக்கப்படுமா? அல்லது ஊரடங்கு வரை மூடப்படுமா? என்பது தெரியும்

More News

கொரோனா நோயாளி தப்பியதால் சென்னை மருத்துவமனையில் பரபரப்பு

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் தொடர்பால்

ராகவா லாரன்ஸ் கோரிக்கையை உடனே செயல்படுத்திய கேரள முதல்வர்!

திருவனந்தபுரத்தில் உள்ள NIMS மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயார் முடக்குவாதத்தால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி

தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய இயக்குனர் பாரதிராஜா!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும் நன்றி தெரிவித்து இயக்குநர் இமயம் பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா குறித்து அதர்வா கூறிய கமெண்ட்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நடிப்பு ஆகியவற்றை பாராட்டாதவர்களே தென்னிந்தியாவில் இருக்க முடியாது என்பது தெரிந்ததே.

இந்தியாவில் மே 17 க்குப் பிறகு என்ன நடக்கும்???

இந்தியாவில் நிலவும் சூழலைப் பொறுத்து இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு (மே 17) க்குப்பின் மீண்டும் தொடருவதற்கு வாய்ப்பு இல்லை என்று Economics Times செய்தி வெளியிட்டு இருக்கிறது