அஜித்தின் அறிவியல் குழுவுக்கு அப்துல்கலாம் விருது: தமிழக அரசு அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் தல அஜித்தின் ஆலோசனையில் தக் ஷா என்ற மாணவர்கள் குழு ஒன்று உருவாக்கியுள்ள ஆளில்லா விமானம் உலக சாதனை செய்தது என்பதும், இந்த குழுவினர் உருவாக்கிய ஆளில்லா விமானம் சுமார் ஆறு மணி நேரம் விண்ணில் பறந்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ஆளில்லா விமானத்தை உருவாக்கி சாதனை செய்த அஜித்தின் ஆலோசனை குழுவான சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வான்வெளி ஆராய்ச்சி மையமான தக் ஷா குழுவுக்கு அப்துல்கலாம் விருது என்ற அறிவியல் விருது கிடைத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
இன்று சுதந்தின தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு துறைக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அறிவியல் துறைக்கு அப்துல்கலாம் விருதினை தக் ஷா குழுவிற்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது இந்த குழுவிற்கும், இந்த குழுவின் ஆலோசகரான அஜித்துக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout