தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரம்: தமிழக அரசு அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,November 02 2018]

தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சமீபத்தில் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு தீபாவளி கொண்டாடும் மக்கள் அனைவரையும் அதிருப்தி அடைய செய்தது

இந்த நிலையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால் நேரத்தை அதிகரிக்க முடியாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வேண்டுமானால் பட்டாசு வெடிக்கும் அந்த இரண்டு மணி நேரத்தை தமிழக அரசே நிர்ணயிக்கலாம் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த அறிவிப்பை சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படிதான் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ஜோதிகாவின் இரட்டை சகோதரிகள் யார் தெரியுமா?

நடிகை ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த 'காற்றின் மொழி' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றது. தீபாவளி கழித்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

செல்பி எடுத்த இளைஞருக்கு புது போன் வாங்கி கொடுத்த சிவகுமார்

சமீபத்தில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டபோது அவரை செல்பி எடுக்க ஒரு இளைஞர் முயற்சி செய்தார். இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன்

சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

தீபாவளி ரேஸில் திடீரென இணைந்த தினேஷ் படம்

வரும் தீபாவளி திருநாளான நவம்பர் 6ஆம் தேதி தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

காயத்ரி ரகுராம் கர்ப்பமா?

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவில் முக்கிய பொருப்பில் உள்ளார் என்பது தெரிந்ததே