தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரம்: தமிழக அரசு அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சமீபத்தில் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு தீபாவளி கொண்டாடும் மக்கள் அனைவரையும் அதிருப்தி அடைய செய்தது
இந்த நிலையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால் நேரத்தை அதிகரிக்க முடியாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வேண்டுமானால் பட்டாசு வெடிக்கும் அந்த இரண்டு மணி நேரத்தை தமிழக அரசே நிர்ணயிக்கலாம் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த அறிவிப்பை சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படிதான் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout