திரையரங்குகளில் மீண்டும் 50% பார்வையாளர்கள்: 'ஆர்.ஆர்.ஆர்.', 'வலிமை' ரிலீஸ் என்ன ஆகும்?

  • IndiaGlitz, [Friday,December 31 2021]

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து சற்றுமுன் ஜனவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அவற்றில் முக்கியமாக திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ’வலிமை’ ஆகிய திரைப்படங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் திடீரென 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி என்ற அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக வலிமை ’ஆர்.ஆர்.ஆர்’, ’வலிமை’ படங்களின் ரிலீஸ் தள்ளி போகுமா? அல்லது 50 சதவீத பார்வையாளர்கள் என்ற நிலையில் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

'பீஸ்ட்' ரிலீஸ் அப்டேட்டை அறிவித்தது சன் பிக்சர்ஸ்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம்

பிரபலங்கள் பரிந்துரை செய்த புத்தகங்களின் வரிசை!

சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி வாசகர்கள் பலரும் புத்தகங்களைக் குறித்து ஆர்வம் காட்டிவருகின்றனர். அந்த வகையில்

வாசிப்பு திருவிழா… தமிழில் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகங்கள்!

சென்னை புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 6 துவங்கி 23 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வார நாட்களில் மதியம் 3-இரவு 8.30

29 வயதில் ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்… ரசிகர்கள் அதிச்சி!

செஞ்சூரியனில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்

அஜித்தின் 'வலிமை' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் அதன் பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.