டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வரும் 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளை திறக்கலாம் என்று அரசு சில தளர்வுகளை அறிவித்து இருந்தது. அதன்படி நாளை முதல் சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி 15% ஆயத்தீர்வை வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியத்‌ தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின்‌ மீது விதிக்கப்படும்‌ ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15 சதவீதம்‌ உயர்த்தியுள்ள காரணத்தினால்‌, சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின்‌ அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய்‌ கூடுதலாகவும்‌, நடுத்தர மற்றும்‌ பிரீமியம்‌ வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின்‌ அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய்‌ கூடுதலாகவும்‌ 07.05.2020 முதல்‌ உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது