அவசர பயணம் செல்லவேண்டுமா? உதவி செய்கிறது தமிழக அரசு
- IndiaGlitz, [Sunday,March 29 2020]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் யாரும் வெளியே நடமாட அனுமதி இல்லை. மிகவும் அவசிய தேவை இருந்தால் மட்டும் மக்கள் வெளியேற வேண்டும் என்றும் எந்த விதமான அவசர தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவம், இறப்பு, திருமணம் உள்ளிட்ட மிக அவசர தேவைகளுக்காக வெளியே செல்ல விரும்புபவர்களுக்கு என ஒரு ஹெல்ப் லைன் எண்ணை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த எண்ணை அழைத்தால் அவசர பயணம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் உள்ள இந்த எண்ணிற்கு வரும் அழைப்புகளை ஏற்கவும் அதன் பின்னர் அவர்களுக்கு உதவி செய்யவும் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னைக்குள் அல்லது சென்னையில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு அவசரமாக செல்லும் நிலையில் உள்ளவரக்ள் 75300 01100 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.