திரைப்படத்துறையினர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியின் போது உரிய சமூக இடைவெளி கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
மேற்கண்ட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கீழ்க்கண்ட தயாரிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை மட்டும் 11.5.2020 முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள் :
1) படத்தொகுப்பு (அதிகபட்சம் 5 பேர்)
2) குரல் பதிவு (அதிகபட்சம் 5 பேர்)
3) கம்ப்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ் (10 முதல் 15 பேர்)
4) டி.ஐ. எனப்படும் நிற கிரேடிங் - (அதிகபட்சம் 5 பேர்)
5) பின்னணி இசை (அதிகபட்சம் 5 பேர்)
6) ஒலிக்கலவை (- (அதிகபட்சம் 5 பேர்)
எனவே, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை மேற்கொள்ளும் சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டுகளை பெற்று தந்து, அவர்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments