திரைப்படத்துறையினர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியின் போது உரிய சமூக இடைவெளி கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்களும்‌, சின்னத்திரை தயாரிப்பாளர்களும்‌, கொரோனா ஊரடங்கால்‌ கடந்த 50 நாட்களாக எந்த பணியும்‌ நடக்காததால்‌ பலரின்‌ வாழ்வாதாரம்‌ கேள்விக்குறி ஆகி உள்ளதால்‌, இத்தருணத்தில்‌ தயாரிப்புக்குப்‌ பிந்தைய போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை செய்வதற்காக மட்டும்‌ அனுமதி அளிக்க வேண்டும்‌ என்றும்‌ அரசிடம்‌ கோரிக்கை வைத்தனர்‌.

மேற்கண்ட தயாரிப்பாளர்களின்‌ கோரிக்கையை கனிவுடன்‌ பரிசீலித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, கீழ்க்கண்ட தயாரிப்புக்குப்‌ பிந்தைய போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை மட்டும்‌ 11.5.2020 முதல்‌ மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள்‌ :

1) படத்தொகுப்பு (அதிகபட்சம்‌ 5 பேர்‌)
2) குரல்‌ பதிவு (அதிகபட்சம்‌ 5 பேர்‌)
3) கம்ப்யூட்டர்‌ மற்றும்‌ விஷுவல்‌ கிராபிக்ஸ்‌ (10 முதல்‌ 15 பேர்‌)
4) டி.ஐ. எனப்படும்‌ நிற கிரேடிங்‌ - (அதிகபட்சம்‌ 5 பேர்‌)
5) பின்னணி இசை (அதிகபட்சம்‌ 5 பேர்‌)
6) ஒலிக்கலவை (- (அதிகபட்சம்‌ 5 பேர்‌)

எனவே, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை மேற்கொள்ளும்‌ சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள்‌, இப்பணியில்‌ ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டுகளை பெற்று தந்து, அவர்கள்‌ சமூக இடைவெளியுடனும்‌, முகக்கவசம்‌ மற்றும்‌ கிருமி நாசினி உபயோகித்தும்‌, மத்திய மாநில அரசுகள்‌ விதிக்கும்‌ அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்றியும்‌ பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

நேற்று நிலவு நடத்திய அற்புதமான கண்காட்சி!!!  

இயற்கை சில நேரங்களில் தனது அழக்கை காட்டி மனிதர்களை ஊற்சாகப்படுத்தும். அப்படியொரு நிகழ்வை நேற்று, நிலவு அரங்கேற்றியிருந்தது

சசிகுமாரிடம் பெற்ற கடனை திருப்பி கொடுத்துவிடுவேன்: ஒரு விவசாயியின் தன்னம்பிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கொரோனா விடுமுறையில் 2 முன்னணி இயக்குனர்களுடன் டிஸ்கஸ் செய்யும் பிசி ஸ்ரீராம்

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோலிவுட் திரையுலகில் கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு உள்பட எந்த பணியும் நடைபெறவில்லை.

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு வில்லனாகும் அரவிந்தசாமி?

ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

விஷவாயு விவகாரம்: ரூ.50 கோடி செலுத்த எல்ஜி நிறுவனத்திற்கு உத்தரவு

ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் இயங்கிவந்த எல்ஜி பாலிமர்ஸ் என்ற நிறுவனத்தில் நேற்று திடீரென விஷவாயு கசிந்ததால் பொது மக்கள் கொத்துக்கொத்தாக திடீர் திடீரென சாலையில் மயக்கம்