மெரீனாவுக்கு அனுமதி, பள்ளி கல்லூரி திறப்பு குறித்த தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைவதை அடுத்து தமிழகத்தில் டிச.31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது
மேலும் தமிழக அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரி, இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7-ம் தேதி தொடங்க அனுமதிக்கப்படுவதாகவும், புதிய மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 1 முதல் தொடங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது
மேலும் டிசம்பர் 14ம் தேதி முதல் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி அளித்துள்ள தமிழக அரசு சமுதாய, அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படுவதாகவும் இந்த கூட்டங்களில் அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கலாம் எனவும் அறிவித்துள்ளது
மேலும் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதித்துள்ள தமிழக அரசு, பொருட்காட்சி அரங்கங்களில் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளித்துளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments