எஸ்வி சேகர் வீட்டில் கெட்டுப்போன பால்: அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை
- IndiaGlitz, [Monday,April 27 2020]
தமிழகத்தில் தினமும் 50 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி ஊரடங்கு நேரத்தில் கஷ்டப்படும் பொதுமக்களின் கோரிக்கைகளை டுவிட்டர் மூலம் அறியும் தமிழக முதல்வர் உடனுக்குடன் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் நேற்று தனது சமூக வலைப்பக்கத்தில் தான் வாங்கிய 11 பால் பாக்கெட்டுகளில் 9 பால் பாக்கெட்டுகள் குக்கரில் காய்ச்சும்போது திரிந்து விட்டதாகவும், வீட்டில் 90 வயது தாயார் மற்றும் குழந்தைகள் இருப்பதால் பால் இல்லாமல் என்ன செய்வது? என்றும் கேள்வி எழுப்பினார். இந்த ட்விட்டை அவர் தமிழக முதல்வருக்கும் டேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து அதிரடியாக ஆவின் பால் நிறுவனத்தினர் எஸ்வி சேகரின் வீட்டிற்கு வந்து 9 புதிய பால் பாக்கெட்டுகளை வழங்கி விட்டுச் சென்றதாக தெரிகிறது. இது குறித்து எஸ்வி சேகர் தனது சமூக வலைத்தளத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவு செய்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது: நான் தங்களுக்கு பதிவு பண்ணிய 3 மணி நேரத்துக்குள் 9 புதிய double toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக்கொடுத்து சென்றார். தங்களுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்’ என எஸ்வி சேகர் குறிப்பிட்டிருந்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவ்வப்போது டுவிட்டரின் மூலம் பொதுமக்கள் கேட்கும் உதவிகளை செய்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் எஸ்வி சேகரின் கோரிக்கையையும் அவர் நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@CMOTamilNadu @OfficeOfOPS நான் தங்களுக்கு பதிவு பண்ணிய 3 மணி நேரத்துக்குள் 9 புதிய double toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக்கொடுத்து சென்றார். தங்களுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும் https://t.co/KZO2phKlI1 pic.twitter.com/HSttvwst8U
— S.VE.SHEKHER???? (@SVESHEKHER) April 26, 2020