தமிழக ஆளுனருக்கு கொரோனா தொற்று உறுதி: தனியார் மருத்துவமனை அறிக்கை

  • IndiaGlitz, [Sunday,August 02 2020]

தமிழக ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன்னர் ஆளுநரின் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஆளுனர் மாளிகையில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்ள அந்த தனியார் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், கொரோனா பாசிட்டிவ் என்றாலும், அவரது உடல் சீராக இருப்பதாகவும் அந்த மருத்துவமனை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது

More News

கொரோனாவில் இருந்து குணமானார் அமிதாப்: அபிஷேக் நிலை என்ன?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதனை தொடர்ந்து ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராத்யா

'பாகுபலி' மகிழ்மதி நாட்டின் பெயரில் இயக்கம் ஆரம்பித்த நடிகரின் மகள்!

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் அவர் விரைவில் ஒரு இயக்கம் ஆரம்பித்து சமூக சேவை செய்யவிருப்பதாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

ஜீன்ஸ் பேண்டிற்குள் புகுந்த பாம்பு: 7 மணி நேரம் நின்று கொண்டே இருந்த வாலிபரால் பரபரப்பு

வாலிபர் ஒருவரின் ஜீன்ஸ் பேண்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டதால் அந்த வாலிபர் பாம்பு வெளியே வரும் வரை ஏழு மணி நேரம் நின்று கொண்டே இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திடீரென கிளம்பிய இளம்பெண்ணின் BMW கார்: நாய்க்குட்டியால் ஏற்பட்ட விபத்து

டெல்லியில் இளம் பெண் ஒருவர் BMW காரில் உட்கார்ந்திருந்த நிலையில் திடீரென அவருடைய நாய்க்குட்டி துள்ளி குதித்ததால் அதிர்ச்சி அடைந்து தவறுதலாக ஆக்சிலரேட்டரை மிதித்தார்.

காவல்துறையில் முதல் லெஸ்பியன் ஜோடி: நீதிமன்றம் சென்று உரிமையை நிலையாட்டிய இளம்பெண்கள்

குஜராத் காவல் துறையை சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களை லெஸ்பியன் என்று அறிவித்துக்கொண்டதோடு அதை நீதிமன்றத்திலும் சென்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது