கொரோனா தொடர்பான பொருட்களுக்கு விலை நிர்ணயம்....! தமிழக அரசு அறிவிப்பு....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா சார்ந்த பொருட்களான முகக்கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களுக்கு, தமிழக அரசு விலையை நிர்ணயம் செய்துள்ளது.
கொரோனா தொற்று உச்சம் அடைந்து வரும் சூழலிலும், பலர் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து வருகிறார்கள். கொரோனா சார்ந்த பொருட்களுக்கு கிடைத்த வரை லாபம் என்று, அதிக விலையை நிர்ணயம் செய்து பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் விதத்தில், தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா சார்ந்த பொருட்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
1. இருப்பதிலே அதிகம் விலை உயர்ந்த மற்றும் தரமான மாஸ்க், என்-95 மாஸ்க் தான். இதன் அதிக பட்சவிலை தற்போது 22 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிகமாக விற்பனை விலை இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
2. இதேபோல் பிபிஇ கிட் என்ற கவச உடையின் விலை ரூ.273 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையளிக்கும் சில மருத்துவமனைகளில், நர்ஸ்கள் மற்றும் மருத்துவர்கள் அணியும், பிபிஇ கிட்-க்கான கட்டணத்தை நோயாளிகளிடம் இருந்தே வசூல் செய்கிறார்கள். அதன் விலை 700 ரூபாயாக இருந்து வருகிறது.
3.அந்த வகையில் 200 மிலி விற்பனை செய்யப்படும், கிருமி நாசினியின் விலை ரூ.110 -ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. மூன்றடுக்கு உள்ள சர்ஜிக்கல் மாஸ்க், அதன் தரத்திற்கு தகுந்தாற்போல் விற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் அதிகபட்ச விலை ரூ.4.50 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் தான் கேரளாவில், அத்தியாவசியப் பொருட்கள் விலை நிர்ணயச் சட்டம் (1986)-இன் கீழ் கொரோனா சார்ந்த மருத்துவ பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதை கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் செயல்முறைபடுத்தினார்.
பிபிஇ கிட் - ரூ. 273, என்95 முகக் கவசம் - ரூ.22, மூன்று அடுக்கு முகக் கவசம் - ரூ.3.90, சானிடைசர் 100 மி.லி. ரூ.55 என்பதன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments