கொரோனா தொடர்பான பொருட்களுக்கு விலை நிர்ணயம்....! தமிழக அரசு அறிவிப்பு....!

  • IndiaGlitz, [Tuesday,June 08 2021]

கொரோனா சார்ந்த பொருட்களான முகக்கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களுக்கு, தமிழக அரசு விலையை நிர்ணயம் செய்துள்ளது.

கொரோனா தொற்று உச்சம் அடைந்து வரும் சூழலிலும், பலர் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து வருகிறார்கள். கொரோனா சார்ந்த பொருட்களுக்கு கிடைத்த வரை லாபம் என்று, அதிக விலையை நிர்ணயம் செய்து பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் விதத்தில், தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா சார்ந்த பொருட்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

1. இருப்பதிலே அதிகம் விலை உயர்ந்த மற்றும் தரமான மாஸ்க், என்-95 மாஸ்க் தான். இதன் அதிக பட்சவிலை தற்போது 22 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிகமாக விற்பனை விலை இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

2. இதேபோல் பிபிஇ கிட் என்ற கவச உடையின் விலை ரூ.273 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையளிக்கும் சில மருத்துவமனைகளில், நர்ஸ்கள் மற்றும் மருத்துவர்கள் அணியும், பிபிஇ கிட்-க்கான கட்டணத்தை நோயாளிகளிடம் இருந்தே வசூல் செய்கிறார்கள். அதன் விலை 700 ரூபாயாக இருந்து வருகிறது.

3.அந்த வகையில் 200 மிலி விற்பனை செய்யப்படும், கிருமி நாசினியின் விலை ரூ.110 -ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4. மூன்றடுக்கு உள்ள சர்ஜிக்கல் மாஸ்க், அதன் தரத்திற்கு தகுந்தாற்போல் விற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் அதிகபட்ச விலை ரூ.4.50 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் தான் கேரளாவில், அத்தியாவசியப் பொருட்கள் விலை நிர்ணயச் சட்டம் (1986)-இன் கீழ் கொரோனா சார்ந்த மருத்துவ பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதை கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் செயல்முறைபடுத்தினார்.

பிபிஇ கிட் - ரூ. 273, என்95 முகக் கவசம் - ரூ.22, மூன்று அடுக்கு முகக் கவசம் - ரூ.3.90, சானிடைசர் 100 மி.லி. ரூ.55 என்பதன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

'சீயான் 60' படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் வரும் 18ம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் இயக்கி வரும் மற்றொரு திரைப்படமான 'சியான் 60 படம்

ஊரடங்கு நேரத்தில் சன்னிலியோன் செய்த சேவை!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் ஏராளமான ஏழை எளிய மக்கள் வேலை இன்றி,

இந்திய அளவில் ட்ரெண்டாகும் விலங்குகளின் டுவிட்டுகள்...! குறும்பு நெட்டிசன்களின் செயல்....!

டுவிட்டரில் உயிரினங்களின் பெயர்களை வைத்து, நெட்டிசன்கள் செய்த சேட்டையான செயல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

நீச்சலுடையில் 'அன்பிற்கினியாள்' கீர்த்திபாண்டியன்: வைரல் வீடியோ

சமீபத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படத்தில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும்

'தி ஃபேமிலிமேன் 2' சமந்தாவை பாராட்டிய சூர்யா-கார்த்தி பட நாயகி!

சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியான 'தி ஃபேமிலிமேன் 2' என்ற வெப்தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும் ஒரு சிலர் இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து