பொங்கல் விடுமுறையில், மாணவர்கள் மோடியின் சொற்பொழிவைக் கேட்க பள்ளிகளில் ஏற்பாடு..! தமிழக முதல்வர்.

வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பொங்கல் விடுமுறையில் பள்ளிக்கு வந்து பிரதமர் மோடியின் சொற்பொழிவைக் கேட்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வருகின்ற பொங்கல், விடுமுறை தினத்தன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வந்து பாரத பிரதமர் மோடியின் சொற்பொழிவைக் கேட்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறையானது அறிவிப்பு வெளியிட்டதாக செய்திகள் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் கட்டாயமாக வர வேண்டிய அவசியம் இல்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தந்து டிவிட்டர் தளத்தில் மாணவர்கள் கட்டாயம் வர வேண்டிய அவசியம் இல்லை. வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் மோடியின் பேச்சை கேட்கும் வாய்ப்பை தவறவிடுவார்கள். எனவே அத்தகைய மாணவர்கள் பள்ளிகளில் வந்து பார்க்கலாம். அதற்கான ஏற்பாட்டை ஆசிரியர்கள் பொங்கல் விடுமுறையில் பள்ளிகளில் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

More News

அஜித்தின் 'வலிமை' படத்தின் மூன்று நாள் திட்டம்

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று முடிந்தது என்பது தெரிந்ததே.

'தளபதி 64' படத்தில் இணைந்த மேலும் ஒரு 'கைதி' நடிகர்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே.

மது அருந்திய கல்லூரி மாணவிகள்: வீடியோ வைரலானதால் தற்கொலை முயற்சி!

மயிலாடுதுறையில் தனியார் கல்லூரி மாணவிகள் நால்வர் சீருடை அணிந்தபடி மது அருந்திய வீடியோ வைரல் ஆனதை அடுத்து அந்த மாணவிகளில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பிரபல நடிகரின் படத்திலிருந்து கௌதம் மேனன் விலகலா? பரபரப்பு தகவல் 

பிரபல இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் அடுத்த படமான 'எப்.ஐ.ஆர்' என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்று வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்

கமல்ஹாசன் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

அறிமுக நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் முதல் மாஸ் நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் வரை ஒவ்வொரு திரைப்படத்திற்கும் டீஸர், டிரெய்லர் ஆகியவை வெளியிடுவது வழக்கமான ஒன்றே