மோதல் எதிரொலி: தயாரிப்பாளரை சங்கத்தை பொறுப்பேற்ற தமிழக அரசு

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலுக்கும் ஒரு பிரிவினர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டதால் தற்போது சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுள்ளது. இதனால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் தலைவராக விஷால் வெற்றி பெற்றார். அதில் இருந்தே அவருக்கும் ஒரு பிரிவு தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. சில வாரங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்திற்கு பூட்டுபோடும் அளவுக்கு அந்த மோதல் முற்றியது

இந்த நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. வணிக வரித்துறை மாவட்ட பதிவாளர் என்.சேகர் என்பவரை தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் உள்பட நிர்வாகிகள் யாரும் இனிமேல் சங்கத்தின் பணிகளில் தலையிட முடியாது. இனிமேல் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட சேகர்தான் முடிவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஐஏஎஸ் தேர்வில் சாதனை செய்த பெண்ணை சந்தித்த கமல்!

ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்விஸ் தேர்வு என்று கூறப்படும் ஐஏஎஸ் தேர்வில் பலர் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த ஆண்டு கேரள மாநிலத்தை சேர்ந்த வயநாடு பகுதியின் பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்

சிறுமியை கற்பழித்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த 12ஆம் வகுப்பு மணவன்

திண்டுக்கல் அருகே 7ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், அந்த சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 20 ரூபாய் நோட்! பழைய பணம் செல்லுமா?

ரிசர்வ் வங்கி ஏற்கனவே, ரூ.2000 ,ரூ. 500 , ரூ.200 , ரூ.100 , ரூ.50 , ரூ.10 ஆகிய புதிய பணங்களை அறிமுகம் செய்துள்ள நிலையில்...

16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் உறவு கொண்டால் நடவடிக்கை வேண்டாம்: உயர்நீதிமன்றம் ஆலோசனை

16 வயதுக்கு மேல் உள்ள ஆண், பெண் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் அவர்கள் மீது போக்சோ சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்

கார்த்தி-ஜோதிகா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தை 'பாபநாசம்' பட இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.